×

விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஏகாதசி பகல்பத்து 6ம் நாள் விழா

மன்னார்குடி, டிச.21: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் வரும் 25 ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. அதனையொட்டி கடந்த 5நாட்களாக கோயிலில் பகல் பத்து, ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ஒரு பகுதியான பகல்பத்து 6ம்நாளான நேற்று பெருமாள் விஜயராகவ நாயக்கர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மன்னர் விஜயராகவ நாயக்கர் பெருமாளுக்கு வழங்கிய வைரஆபரணங்கள் மற்றும் மாராட்டிய அரசர்கள் குறிப்பாக சரபோஜி ராஜா பெருமாளுக்கு வழங்கிய ரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள், சோழர் காலத்தில் ராஜாதிராஜன் என்கிற சோழ மன்னர் வழங்கிய தங்ககல் பதித்த ஆபரணங்கள் அத்துடன் குவலயா பீடம் என்கிற யானையை வதைத்து அதனுடைய தந்தத்தை இடது பாகத்தில் சாற்றிற்கொண்டு ராமபாணத்தை ஏற்றி கொண்டு கோபாலனுக்கே உரிய வேத்திரம் என்கிற சாட்டையை கையில் ஏந்தி அதன் பிறகு லட்சுமி ஆரத்தோடு மகாராஜாதி ராஜனாக சீர் மிகு ராஜகிரிடம் தரித்து கொண்டு பகல்பத்து 6 ம் நாளன்று சுவாமி விஜய ராகவ நாயக்கர் அலங்காரத்தில் சேவை தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நீடாமங்கலம்: வரலாற்றுச்சிறப்புமிக்க இக்கோயிலில் வருடம் தோறும் வைகுண்டஏகாதசிவிழா வெகுசிறப்பாக நடைபெற்றுவருகிறது. இவ்வாண்டும் வைகுண்டஏகாதசியை முன்னிட்டு திருஅத்யயன உற்சவம் 20 நாட்கள் நடைபெறவுள்ளது.நேற்று மாலை பகல் பத்து உற்சவத்தை யொட்டி சந்தானராமருக்கு பச்சை பட்டு உடுத்தப்பட்டு சிறப்பு,அபிஷேக ஆராதனை நடந்தது. இதனை முன்னிட்டு பட்டாச்சாரியார் நாராயணன் அனைத்து சன்னதிகளிலும் ஆராதனைகள் செய்து அலங்காாரம் செய்தார்.மாலை சீதா,லெட்சுமண,பரசத்ருகனர்,அனுமன் சமேத சந்தானராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வரும் 24ம்தேதி  வரை பகல் பத்து உற்சவம் நடைபெறுகிறது. வரும் 25ம்தேதி  வைகுண்டஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.அன்றிரவு ராப்பத்து உற்சவம் தொடங்கி ஜனவரி 3ம்தேதி நிறைவடைகிறது.20 நாட்களும் நாலாயிர திவ்விய பிரபந்தபாராயணம் நடைபெறும்.நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் சிங்காரவடிவேலு,தக்கார் ரமேஷ், மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags : Farmers Association ,Ekadasi Day ,Mannargudi Rajagopalaswamy Temple ,
× RELATED மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது...